கிழக்கு மாகாணத்தில் இயங்கும் தீவிரவாத குழுக்களைச்சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்

நாட்டின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதம் மீண்டும் தோன்ற அனுமதிக்கப்படாது என்றும் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் தீவிரவாத குழுக்களைச்சேர்ந்தவர்கள்  கைது செய்யப்படுவார்கள் அத்துடன் போதைப்பொருள், பாதாள உலக மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் இலங்கையில் இருந்து என்றென்றும் ஒழிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன  தெரிவித்தார்.

களுத்துறையில் நடைபெற்ற விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டபோது பாதுகாப்பு செயலாளர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று மற்றொரு சம்பவங்கள் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.