பள்ளிவாயலுக்கு வணக்க வழிபாடுகளுக்கு வருகை தருவோர் வெள்ளிக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் தலைக்கவசம் அணிந்து வர வேண்டுமென்ற அறிவுறுத்தலை பள்ளிவாயல்கள் ஊடாக விடுக்குமாறு கோரி வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன ஒப்பமிட்டு அனைத்து பள்ளிவாயல்களுக்கும் வேண்டுகோள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் கோரப்பட்டுள்ளதாவது, பள்ளிவாயல்களுக்கு வருவோர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வருவதுடன், நாட்டின் போக்குவரத்து சட்டங்களைப்பேணி நடக்க வேண்டுமென்பதுடன் மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லீம் பிரதேசங்களான வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீறாவோடை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, காவத்தமுனை, செம்மண்ஓடை, பதுரியா, மாஞ்சேலை, தியாவட்டுவான் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி முலம் அறிவ்தல் செய்யப்பட்டது.