நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மூன்றாவது இடத்தில் உள்ளது. கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தின் பொது முகாமையாளர்

smart
(பொன்ஆனந்தம்)

நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மூன்றாவது இடத்தில் உள்ளது. இத்துறை கொரோனா தாக்கம் ஏற்பட்டதுடன் வருமானம் முற்றாக பூச்சிய நிலையை அடைந்துள்ளது.
என கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தின் பொது முகாமையாளர் கலாநிதி ஆர். ஞானசேகரன் தெரிவித்தார்
இளைஞர் அபிவிருத்தி அகத்தின் மூலம் எஸ்4ஐஜி இன் அனுசரணை யில் வழங்கப்பட்ட சுற்றுலாத்துறை பயிற்சிநெறியின் காரணமாக திருகோணமலை சல்லி கிராமத்தில் அக்காச்சி  சைவ, அசைவ சுவையகம் ஞாயிறன்று வைபரீதியாக திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கலாநிதி ஞானசேகரன் மேலும் குறிப்பிடகையில், யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னர் 2009அளவில் நாட்டில் சுற்றுலாத்துறை யினரின் வருகை  நான்கு லட்சத்து 70ஆயிரமாக இருந்தது. பின்னர் 2018இல்இவ்வெண்ணிக்கை 23. 3லட்சத்தை தாண்டியது. இந்தக்காலத்தில் திருகோணமலை யின்நிலாவெளி  வலயத்தில் தங்குமிட விடுதிகள் உள்ளிட்ட சுற்றுலாத்துறை வசதிகள் வளர்ச்சி யடைந்தைகண்டோம். இதன்போது சுற்றுலாத்துறை மற்றும் சிறுமுயற்சியாளர்களின் நடவடிக்கைகள்  வளர்ந்தன
இந்த வளர்சி ஏப்பிரல் ஈஸ்ரர் தாக்குதலின் பின்னர் பாதிக்கப்பட்டு பயணிகளின் வரவு பாதிப்படைந்தது.  இதனால் நாட்டின் வருமானமும் பாதிப்படைந்தது.
இறுதியாக 2020மார்ச் மாத்தில் பரவிய கொரோனா காரணமாக விமானப்போக்கு வரத்து தடைபட்டதனால் சுற்றுலாத்துறை பூச்சிய நிலமையை எட்டியது. இதனால் சுற்றுலா த்துறையை நம்பிய மக்கள் பெரும் பாதிக்க பட்டுள்ளனர்
இத்துறை மீள இயல்பு நிலைக்கு
 வரும்போது அதனை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை நாம் மேற்கொள்ளவுள்ளோம். அதனடிப்படையில் அகம் மற்றும் எஸ் 4ஐஜியின் இந்த ஊக்குவிப்புக்கள் பயனுள்ளதாக அமையும். இன்றைய இந்த முயற்சி பாராட்டத்தக்கது எனவும் குறிப்பிட்டார்
இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் கை. வைரவநாதன், எஸ்4ஐஜியின் மாவட்ட முகாமையாளர் ஆர். மதியழகன், அகத்தின் இணைப்பாளர் பொ. சற்சிவானந்தத்தின் சற்சிவானந்தம் திட்ட முகாமையாளர் திருமதி. ஷிரானி பெனர்டோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்