ஏறாவூர் நிருபர் )
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் விசேட பாடசாலை மாணவர்களுக்கு தினமும் இலவசமாக காலை உணவாக வழங்கும் விசேட திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வலயக் கல்விப்பணிமனையின் சமாதானக் கல்வி மற்றும் சமூக நல்லிணக்க இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர் இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் எச்எம்எம். பஷீர் மற்றும் ஆசிரியைகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஏறாவூர் – ஐயங்கேணி பிரதேசத்தைச்சேர்ந்த திருமதி ஜே. பாத்திமா நிஹாறா என்ற நலன்விரும்பி இதற்கான கொடுப்பனவினை தொடர்ச்சியாக வழங்க பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த சுமார் பத்து வருடங்களாக இயங்கிவரும் இவ்விசேட பாடசாலையில் தற்போது இருபது மாணவர்கள் உள்ளனர்.
கடந்த சுமார் பத்து வருடங்களாக இயங்கிவரும் இவ்விசேட பாடசாலையில் தற்போது இருபது மாணவர்கள் உள்ளனர்.
வலயக் கல்விப்பணிமனையின் சமாதானக் கல்வி மற்றும் சமூக நல்லிணக்க இணைப்பாளர் எம்ஜிஏ நாஸரின் வேண்டுகோளுக்கிணங்க இம்மாணவர்களுக்கு கடந்த நான்கு வருடகாலமாக நலன் விரும்பிகளின் உதவியுடன் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசேட தேவையுடைய மாணவர்களது கல்வி மேம்பாடுகருதி இவ்வசதிகள் செய்யப்படுவதாக வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கருத்துவெளியிட்டுள்ளார்