மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியில் சகல அதிகாரிகளும் ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும் .

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை  நேற்று (31) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்தில் புதிதாக எமது மாவட்டத்திற்கு கிடைத்துள்ள அமைச்சரை வரவேற்று வாழ்துக்களும் தெரிவிக்கப்பட்டது முன்பு பாராளுமன்ற உறுப்பினராகவும் அபிவிருத்திக்குழுவின் தலைவராகவும் இம்மாவட்டத்திற்கு பணியாற்றியவர் தற்போது இராஜாங்க அமைச்சராக எமது மாவட்டத்திற்கு வந்தமை பெருமைக்குரிய விடையமாகும் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உரையாற்றுகையில் முழு இலங்கைக்குமான இராஜாங்க அமைச்சராக நான் செயலாற்றவேண்டியவனாக உள்ளேன் இருந்தும் எனது மாவட்டம் என் சாந்த மக்களுக்கு என்ற வகையில் எனைய மாவட்டத்தினை விடவும் சற்று அதிகமான வேலைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்

மேலும் கூறுகையில் கடந்த ஐனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டுக்கு ஆதரவு தெரிவித்தோம் அந்தகட்சிசார்பான ஐனாதிபதி வெற்றிபெற்றார் அதனை தொடந்து வந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் மொட்டு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றோம் மக்களுக்கு உண்மையான அபிவிருத்தியை மகிந்த ராஜப~;ச அரசாங்கம்ந்தான் மக்களுக்கு செய்து வந்தது பாலங்கள் வீதிகள் போன்ற பாரிய அபிவிருத்தியை செய்தமையால்தான் நாங்கள் இன்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அபிவிருத்தியினை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

மாவட்டத்தின் அபிவிருத்தியில் சகல அதிகாரிகளும் ஒத்துளைப்புகளை வழங்கவேண்டும் என்றும் மவட்டத்திற்கு எவ்வாறான அபிவிருத்தியினை முன்னேடுக்கப்படவேண்டும் என அரசாங்க அதிகாரிகளுடனும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளது.

தபால்துறையினை புனரமைக்கப்படவேண்டிய தேவை மட்டக்களப்புக்கு மாத்திரம் அல்ல இலங்கை முழுவதும் ஆரம்பிக்கபடவேண்டும் தரம் உயர்த்தப்படவேண்டிய தபால் அகங்களும் அதிகமாகவுள்ளது அவைகளையும் தரம் உயர்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஊழியர்கள் பலர் நீண்ட காலமாக நிரந்தரம் ஆக்கப்படாமலும் உள்ளனர் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சனைகள் தேவைகள் மற்றும் கடந்தகால நல்லாட்சி அரசாங்கத்தினால் முடிவுறுத்தப்படாத வேலைத்திட்டங்கள் மற்றும் இடைநிறுத்தப்பட்டவேலை திட்டங்கள் என்பன தொடர்பாக ஆராயப்பட்டது.