இன்று சிறப்பாக நடைபெற்ற சித்திவிநாயகராலய மகாகும்பாபிசேகம்.

(காரைதீவு   சகா)


கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்திலமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகராலயத்தின் மகாகும்பாபிசேகம் (31) திங்கட்கிழமை காலை  பிரதேச செயலாளர் ஏ.ஜே.அதிசயராஜ் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

கல்முனை ஸ்ரீமுருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தசிவக் குருக்கள் தலைமையில் கும்பாபிசேகக்கிரியைகள் நடைபெற்றன்.கடந்த சனிக்கிழமையன்று இக்கிரியைகள் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது

பிரதேச செயலக ஊழியர்களின் வழிபாட்டுத்தலமாக பிரதேசசெயலகமுன்றலில் அமைந்துள்ள இவ் ஆலயக்கட்டுமானப்பணிகள் இடம்பெற்றபோது பல தடங்கல்கள் இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்டன.

மேலும் அவ் விவகாரம்  நீதிமன்றம் வரை சென்றது. இருப்பினும் நீதிமன்றத்தின்  சாதகமான தீர்ப்பையடுத்து கும்பாபிசேக பணிகள் இடம்பெற்று  மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பேரவைச்செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம்.அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபர் வே.ஜெகதீசன் முன்னாள் பிரதேசசெயலாளர் க.லவநாதன் உள்ளிட்ட பலமுக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள்.