காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கியவர்கள் இன்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன்

காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கியவர்கள் இன்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளார்கள். என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில்நேற்று நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அன்று இராணுவத்தை வழிநடாத்திய நபர்இன்றுஜனாதிபதியாக உள்ளார் இவர்கள்எமது மக்களுக்கு நீதியைப்பெற்றுகொடுக்கவேண்டும். காணாமல்ஆக்கப்பட்டவர்கள் எங்குள்ளார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவதுடன் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க அரசு ஆவணசெய்யவேண்டும்.

அமைதியாக நாம் நடாத்தஇருந்தபோராட்டத்தை ஆர்ப்பாட்டமாக மாற்றிய அரசுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்

பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு இலட்சக்கணக்கான நமது மக்கள் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டார்கள்.11800போராளிகளை விடுதலை செய்த இந்த அரசுக்கு ஏன்  நீதியைப்பெற்றுக்கொடுக்கமுடியவில்லை.எமது மக்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் சர்வதேசம் இதனைப்பார்த்துக்கொண்டிருக்கமுடியாது எமக்கு நீதி கிடைக்க அவர்களும் அழுத்தம் கொடுக்கவேண்டும். நாம் நீதிகிடைக்கும்வரை போராடுவோம் என்றார்.