13வது திருத்தம் இந்தியா அனுப்புகின்றது சிறப்பு தூதுவரை?

0
73

மாகாண சபைகளை ஸ்தாபிப்பதற்கான சட்டபூர்வமான அடிப்படையை வழங்கிய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை சமாளிக்க இந்தியா ஒரு சிறப்பு தூதரை நியமிக்க தயாராகி வருவதாக புதுடில்லியிலுள்ள  இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான தெற்காசிய அதிகாரிகள் ஏற்கனவே ஒரு விவாதத்தைத் தொடங்கியுள்ளதாகவும் புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகர் பதவியை வகித்த   முன்னாள் மூத்த தூதர் ஒருவர் இவ்விடயங்களை கையாள நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது..