புதிய உள்ளடக்கத்துடன் புதிய அரசியலமைப்பின் கீழ் நாட்டை கொண்டுவருவதே எமது இலக்கு. விமல்வீரவன்ச.

0
91

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஆரம்ப வரைவு அடுத்த புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள போதிலும், அதற்கு பதிலாக முற்றிலும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது மிகவும் முக்கியமானது என்று தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

“19 வது திருத்தத்தை திருத்துவதை விட முக்கியமானது என்னவென்றால், இந்த நாட்டை ஜெயவர்தன அரசியலமைப்பிற்கு பதிலாக புதிய உள்ளடக்கத்துடன் புதிய அரசியலமைப்பின் கீழ் கொண்டுவருவதாகும்.”

எனவே, இந்த மாபெரும் ஆணையின் நியாயத்தன்மைக்கு உகந்த சூழலில் இந்த நாட்டை புதிய அரசியலமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்றார்.