பட்டிப்பளை பிரதேசத்தில் பட்டத்திருவிழா

0
143

பட்டிப்பளை பிரதேச பட்டம் விடும் திருவிழா இன்று (28) இடம்பெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரெண்டு மாத விளக்கு வேலைத் திட்டத்திற்கு அமைவாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் முதலைக்குடா மேற்கு கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சிறுவர்களை கொண்டு அமைக்கப்பட்ட பட்டங்கள் பறக்க விடப்பட்ட நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி மேனகா புவிக்குமார், கிராம உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.