அப்ப வியாபார கூடாரத்தினை கையளிக்கும்  நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் சுய தொழில் ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின்  கீழ் அமைக்கப்பட்ட அப்ப வியாபார கூடாரத்தினை கையளிக்கும்  நிகழ்வு இன்று மாலை  நடைபெற்றது

மட்டக்களப்பு மாநகர  நிர்வாக எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் வறுமை  கோட்டின்   கீழ்  வாழும்  நலிவுற்ற குடும்பங்கள்  மற்றும் பெண்களை தலைமை தங்கு குடும்பங்களில் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் வகையில்  மாநகர சபையின் நிதி உதவியின் ஊடாக சுயதொழில் ஊக்குவிப்பு   உதவி செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .

அந்தவகையில்  வீதியோரங்களில் வியாபாரத்தில் ஈடுபடுவார்களின் வியாபாரத்தினை மேம்படுத்தும் வகையில்  வியாபாரிகளின்  பாதுகாப்பு மற்றும் விற்பனை  பொருட்களின் சுகாதாரம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைக்கு அமைய வீதியோரங்களில்   வியாபாரத்தில்   ஈடுபவர்களுக்கு  மட்டக்களப்பு மாநகர சபையினால்  ஊக்குவிப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இதன்கீழ்  மாநகர எல்லைக்குட்பட்ட   பகுதி  வீதியோரங்களில் அப்பம் தயாரிக்கும் தொழிலினை மேற்கொண்டு வருவோரை   ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கான அப்ப வியாபார கூடாரங்களை மாநகர சபையானது அமைத்து வழங்கி வருகின்றது.

இதற்கு அமைய  மட்டக்களப்பு பார் வீதியில் நீண்டகாலமாக அப்ப வியாபாரத்தினை சுயதொழிலாக மேற்கொண்டு  நபருக்கான  அப்ப வியாபார கூடாரத்தினை  இன்று  மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்இ   மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள்  கலந்து கொண்டு       அப்ப வியாபார கூடாரத்தினை வழங்கு வைத்தனர்