சாம்பல்த்தீவுக் களப்புப் பகுதியில் தமிழ்மக்களின் காணிகளை அரசகாணிகளாக அறிவிக்கதிட்டம்

பொன் ஆனந்தம்

சாம்பல்த்தீவுக் களப்புப் பகுதியில் 360ஏக்கர் நிலத்தை ஒதுக்கீட்டு வனப்பகுதியாக அறிவித்து வர்த்தமானியில் பிரசுரிக்கும் செயற் பாட்டில் வனத்துறை மற்றும் வனவிலங்குத்துறை இறங்கியுள்ளது.

இது சம்பந்தமாக திருகோணமலை அரசாங்க அதிபர் அசங்க அபயவர்த்தனவுக்கும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஆகியோருக்கும் இடையே திருகோணமலைக் கச்சேரியில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது.

இதற்குள் தமிழ் மக்கள் பலரின் உறுதிக் காணிகளும் அடங்குகின்றன. இந்தக் காணிகளுக்குள் உரிமையாளர் எந்தவொரு வேலையும் செய்யக் கூடாதென அரசுத் தடை விதித்துள்ளது.

இந்த தடையை நீக்கி தனியார் தத்தம் காணிகளில் தாம் விரும்பும் பணிகளை செய்ய ஆவன செய்ய வேண்டும் என  அரசாங்க அதிபரிடம் பா.உ இரா.சம்பந்தன் வலியுறுத்தியதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.இச்சந்திப்பில் . ச .குகதாசனும் கலந்து கொண்டார்.