மட்டக்களப்பில் மர ஆலையொன்றில் தீ பரவல்

மர ஆலை முற்றாக எரிந்து நாசம்இரண்டரைக் போடி நஸ்டம்

ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று (26.08.2020) புதன்கிழமை அதிகாலை மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ பரவலினால் குறித்த மர ஆலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.காத்தான்குடி மூன்றாம் குறிச்சி வாவிக்கரையோரம் உள்ள யு.எல்.அக்பர் என்பவருக்கு சொந்தமான மரஆலையே தீப் பிடித்து எரிந்துள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு தனது மர ஆலையில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று பார்த்த போது மர ஆலை எரிந்து கொண்டிருப்பதாக இதன் உரிமையாளர் அக்பர் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர் குறித்த இடத்திற்கு விரைந்து பொது மக்கள் மற்றும் பொலிசாரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த மர ஆலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் இங்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதியான மரங்கள் முற்றாக எரிந்துள்ளன.அத்துடன் மர ஆலைக்குள் இருந்த ஐந்து ஆடுகள் மற்றும் கோழிகளும் எரிந்து உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் இரண்டரை கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம் மர ஆலையில் ஏற்பட்ட தீப் பரவலுக்கான காரணம் குறித்து காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.