(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவிவுகளிலும் கடமையாற்றி வருகின்ற பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (25) மன்முனை தென்எருவில் பற்று – களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் சேவைகளை மக்கள் காலடிக்குக் கொண்டு செல்லும் நோக்குடன் பிரதேச செயலகங்கள் செயற்பட்டு வருகின்றன. இதனூடாக பொதுமக்களுக்கான சேவையினை வழங்குவதில் பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், பிரதேச செயலகங்களில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப்பணிகள், சமுர்த்தி கொடுப்பனவுகள், ஏனைய கொடுப்பனவுகள், காணி தொடர்பான விடயங்கள் பற்றி ஆராயப்பட்டன.
மேலும் அவற்றை அமுல்;படுத்திவதில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள், ஆளனிப்பறாக்குறை, இடமாற்றம் தொர்பான பலதரப்பட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும், ஆலோசனைகளும் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கும், திணைக்களத் தலைவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்ட இம்மாநாடு மன்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி. சிவபிரியா வில்வரத்தினத்தினால் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிரதம கண்காளர் கே. ஜெகதீஸ்வரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி. இந்திரா மேகன், மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா மற்றும் அனைத்து பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக தினைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.