புகையிரதக் கடவை பாதுகாப்பு ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும்

????????????????????????????????????

–  வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியம் ஜனாதிபதிக்கு கடிதம்.

( எஸ்.சதீஸ்)

புகையிரதக் கடவை பாதுகாப்பு ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு  நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு, ஏறாவூர் – குடியிருப்பில் இடம்பெற்றது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தமது தொழிற்சங்கம் ஊடாக கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாகவும் இவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் றொகான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இவ் ஊடகவியலாளர் சந்திப்பின்போது புகையிரதக் கடவை பாதுகாப்பு ஊழியர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முன்வைத்தனர்.

தமது சேவைக் காலத்தை கவனத்தில்கொண்டு தங்களுக்கான நியமனத்தை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் தாங்கள் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் வெயிலிலும் மழையிலும் இருந்து கடந்த ஏழு வருடங்களாக பணியாற்றிவருவதாகவும் இவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.