பசில் ராஜபக்ச இன்னும் மூன்று மாதத்திற்குள் பாராளுமன்றத்தில்

(வேதாந்தி)

அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பிறகு அமைச்சரவை பதவி வகிக்க பசில் ராஜபக்ஷ மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது..

தற்போது பொதுஜனபெரமுனவின் ஊடாக தேசிய பட்டியலில்  மூலமாக பாராளுமன்றம் சென்ற ஜெயந்த கேதகொட, பசில் ராஜபக்ஷவை அனுமதிக்க நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளார் எனடி கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

19 வது திருத்தத்தின்படி, இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் தேர்தலில்  போட்டியிடவோ  பாராளுமன்றத்துக்கு செல்லவோ முடியாதநிலை காணப்பட்டது. எவ்வாறாயினும், அடுத்த சில வாரங்களுக்குள்  அரசியலமைப்பில் இரட்டை குடியுரிமை தொடர்பான விதிகளை திருத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.

பசில் ராஜபக்ஷ அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேசிய பட்டியலில் ஊடாக  நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார். பொருளாதாரம் தொடர்பான பல சிறப்பு அதிகாரங்களை பசில் ராஜபக்சரிடம் ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, கோதபய ராஜபக்ஷவின் கீழ் அமைக்கப்பட்ட பொருளாதார பணிக்குழுவின் தலைவராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்