புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சிப்பட்டறை

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான  பயிற்சிப்பட்டறை எதிர்வரும் 25 26ம’ திகதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிகா தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பட்டறையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொள்வார். சபாநாயகர் மஹிந்தா யபா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இது 25, 26 தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடாளுமன்றத்தின் குழு எண் 01 இல் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.