உலகின் பரவலாகப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலை பயன்படுத்துவோர் இன்று மின்னஞ்சல்களை அனுப்பவோ அல்லது கோப்புகளை மின்னஞ்சல்களுக்கு இணைக்கவோ முடியாத நிலை காணப்படுகின்றது.
கூகிள் இன்று காலை முதல் இது குறித்து புகார்களைப் பெற்று வருகிறது, மேலும் சில பகுதிகளில் கோப்புகளை அல்லது புகைப்படங்களை இணைக்கவோ பதிவிறக்கவோ முடியவில்லை.
பிசினஸ் இன்சைடர் என்ற இந்திய வணிக இதழின் கூற்றுப்படி, நிலைமையைக் கண்டறிந்து சரிசெய்ய பொறியியல் குழுக்கள் செயல்படுவதாக கூகிள் தெரிவித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகளில் உள்ள ஜிமெயில் பயனாளிகள் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக இணைய சேவை தடைகளை விசாரிக்கும் டவுன் டிடெக்டர் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.