பா.உ விக்கினேஸ்வரன் மீது முதல்நாளே தென்னிலங்கையிலிருந்து விமர்சனம்.

முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், புதிய சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் உரையை அரசியல் உரையாக மாற்றியதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது..

சபாநாயகரை வாழ்த்துவதற்கு பதிலாக, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசியதாகவும் சபாநாயகரை வாழ்த்துவதற்காக மிகக் குறைந்த நேரத்தை செலவிட்டார் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.