நான் திட்டமிட்டு சிறைக்குள் அனுப்பப்பட்டேன்

0
151

நான் திட்டமிட்டு சிறைக்குள் அனுப்பப்பட்டேன் 5 வருடங்களாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றேன்  மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தாருங்கள் என புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற இன்றைய அமர்வில் கலந்துகொண்டு சபாநாயகருக்கு வாழ்த்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன்

தான் சிறையில் உள்ளமையினால் நாடாளுமன்றத்திற்கு வரவேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த சந்திரகாந்தன் இதனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்..