மட்டு.காத்தான்குடி பொலிஸ் பிரிவில் நாவற்குடாவில் இரு வீடுகள் தீப்பிடித்து முற்றாக  நாசம்

0
169

மற்றொரு வீடு தாக்கப்பட்டு முழுமையாக சேதம்
ரீ.எல்.ஜவ்பர்கான் 
காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசங்களில் நேற்றிரவு 11.00 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக இரு வீடக் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
நாவற்குடா இசை நடனக் கல்லூரி வீதியில் 11ம் குறுக்கிலுள்ள இருவீடுகளில்  தீப்பற்றியதால் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பாட்டுள்ளது.
குறித்த இரு வீடுகளில் பரவியதீயை மட்டக்களப்பு மாநகர சந்நைக்குச் சொந்தமான தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றொரு வீடு இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கபட்டுள்ளது.இதனால் வீடு முழுமையாக நாசமாகியுள்ளது.காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்