இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
( எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவுபிரதே சத்திலுள்ள காயான்மடு கிராமத்தில் கொங்கிறீட் வீதிக்கான ஆரம்பகட்ட வேலையினை தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழிற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரள் செவ்வாய்கிழமை (18ம் திகதி) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவ்வீதி அமைக் கப்படவுள்ளது.
காயான்மடு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் க.தேவரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ச.வியாேழந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.