பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி

0
148
ரீ.எல்.ஜவ்பர்கான்–
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினராய்த்  தெரிவு செய்யப்பட்டிருக்கும் தம்pழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கான அனுமதியை மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு மேல் நீதிமனறத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்ற அமர்வுகளிலும் ஏனைய பாராளுமன்ற அமர்வுகளிலும் கலந்து கொள்வதற்கான அனுமதியை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சூசைதாசன் வழங்கினார்.
சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கடந்த 2005.12.25ம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேகத்தின்போரில் கடந்த நான்கு வருடங்களாக விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளையான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர் தலைமை தாங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 67542 வாக்குகளை அவரது கட்சி பெற்றதுடன் அவர் 54277 விருப்பு வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்திற்குத் தாரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது