ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத் திட்டத்தின்கீழ் மட்டு.கல்லடி கடற்கரையோரம் பாரிய தூய்மைப் படுத்தல்

ரீ.எல்.ஜவ்பர்கான்–
ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத் திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தில்  உல்லாசப் பயணிகளைப் பெரிதும் கவரும் பிரதேசமான மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் இன்று முழு நாளும் பாரியளவிலான தூய்மை; படுத்தல் நடவடிக்கைகள் இடம் பெற்றன.

கடற்படை மற்றும் மட்டக்களபபு பிரதேச செயலகம் என்பவற்றுடன் இணைந்து இலங்கை கடற்கரை தூய்மையாக்கல் நிலையம்(உநவெசந கழச டிநயஉh உடநயnரி—ளசடையெமய) மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி அமைப்பு என்பன இதனை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு உதவி பிரதேச செயலாளர் எஸ்.அருணன் கடற்படை மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி லெப்டினன்ட எல்.கமகே கடற்கரை தூய்மையாக்கல் நிறுவன தலைவர் லஹிறு விஜேவர்த்தன உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அரிமா நிறுவனம் லியோ கழகம் உட்பட பல தொண்டர் நிறுவன பணியாளர்களும் இத்தூய்மைப் படுத்தல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இவ் வேலைத் திட்டத்தினூடாக கல்லடி கடற்கரை பிரதேசம் முழுமையாக தூய்மைப் படுத்தமை குறிப்பிடத்தக்கது.