அம்பாறை திருமலை மக்களுக்காகவும் என் உயிரைஅர்ப்பணித்து 24மணித்தியாலங்களும் சேவை செய்யதயாராகவுள்ளேன்

0
260

இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

  (வேதாந்தி)

மட்டக்களப்புக்கு மாத்திரமின்றி அம்பாறை திருமலை மக்களுக்காக என் உயிரைஅர்ப்பணித்து 24மணித்தியாலங்களும் சேவை செய்ய தயாராகவுள்ளதாக இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

அமைச்சுப்பதவியைப்பொறுப்பேற்றவுடன் நேற்று மட்டக்களப்புக்கு வருகை தந்த இராஜங்க அமைச்சருக்கு மட்டக்களப்பில் பலபாகங்களிலும் அமோகவரவேற்பு நடைபெற்றது.

வரவேற்பையடுத்து ஊடகவியலாளர்களிடம்  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்வடகிழக்கில் மொட்டுசின்னத்தின்கீழ்போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரேயொரு வேட்பாளர் நான்மாத்திரமே இது சாதாரண வெற்றி அல்ல இவ்வெற்றியின் ஊடாக தமிழ்தேசியகூட்டமைப்புக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள்.

மாற்றுவழி அரசியல்பாதையூடாகத்தான் கிழக்குமக்களின் அரசியல் இருப்பை பாதுகாக்கமுடியும் என்ற தூரநோக்கில் வெற்றிபெற்றுள்ளோம். கிழக்கில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியைபெற்றுக்கொடுக்க அமைச்சர்கள் இல்லை இதற்கான பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.எனக்கு மட்டக்களப்பு மக்கள் தந்த ஆதரவுக்கு விசுவாசமாக சேவைசெய்யவுள்ளேன்.

முக்கியமாக இரு பொறுப்புக்கள் எனது தலையில் சுமத்தப்பட்டுள்ளது தபால்துறை, ஊடகம் தபால்துறையைப்பொறுத்தவரை நாட்டில் 26ஆயிரம் ஊழியர்கள் வேலைசெய்கின்றார்கள் 3610 உபதபாலகங்களும், 650 பிரதான தபாலகங்களும் உள்ளதுடன் தபால் ஊழியர்களிடையே பெரும் தொழிற்சங்கமும் உள்ளது. இவர்களின் தேவைகளை நிறைவேற்றபாடுபடுவேன். ஊடகத்துறையைச்சேர்ந்தவர்களும் அர்ப்பணிப்புடன் சேவைசெய்கின்றனர். ஊடகவியலாளர்களை மாவட்ட மாகாண தேசியரீதியாக சந்தித்து கலந்துரையாடி அவர்களின் தேவைகளை நிநறவேற்றவுள்ளேன் என்றார்.