மட்டு—கல்முனை வீதி விபத்தில் மூவர் படுகாயம்

0
123
எல்.ஜவ்பர்கான்–
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் கல்லடி பிரதேசத்தில் இன்று மதியம் இடம் பெற்ற வீதி விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனா்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடியில் காத்தான்குடி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் அதன் பின்னால் வந்து யூ வளைவில் திரும்ப முற்பட்ட சிறிய ரக மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறிய ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமியும் மற்றொருவரும் காயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளோட்டியின் அதிக வேகமே விபத்திற்கு காரணமென தெரியவருகிறது.
காத்தான்குடி பொலிசார் விசாரகைளை மேற்கொண்டுள்ளனர்.