திருக்கோவில் பிரதேசத்தில் Race for Education எனும் விசேட கல்வி மேம்பாட்டுத்திட்டம்

0
106
வ.சுகிர்தகுமார்

  கொவிட் 19 தாக்கம் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள க.பொ.தாராதர சாதாரணதர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான பணியை யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் அனுசரணையுடன் ரேஸ் போ எடுவுகேசன்  (Race for Education)  எனும் விசேட கல்வி மேம்பாட்டுத்திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 18 பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ரேஸ் போ எடுவுகேசன்  (Race for Education) அமைப்பின் இணைப்பாளரும் யாழ் பல்கலைக்கழக மாணவனுமாகிய இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் 548 மாணவர்கள் மத்தியில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பிரதி, மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆசிரிய ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 47 பாடசாலைகளை சேர்ந்த 1780 மாணவர்கள் பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.