தேசியக்கொடியில் சிறுபான்மையினர் இல்லை (கோ.கருணாகரன்)

(எருவில் துசி) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ இயக்கம் சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவான கோ. கருணாகரன் அவர்கள்
தனது வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் முகமாக இன்று(15) மகிழூர்,குருமன்வெளி எருவில் போன்ற கிராமங்களுக்கு விஐயம் மேற்கொண்டார்.

இதன் போது எருவில் கிராமத்தில் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி கூறி கருத்துரையாற்றும் போது தற்போதைய இலங்கை அரசாங்கம் தமக்கான
அமைச்சரவை நியமனத்தின் போது காட்சிப்படுத்தி காணப்பட்ட தேசியக்கொடியானது கண்டி இராட்சிய காலத்தில் பயன்படுத்திய தேசியக்கொடியை
பயன்படுத்தியிருந்தமையினை காணமுடிந்தது. இங்கு சிறுபான்மையினரை மையப்படுத்தும் வகையிலான நிறங்கள் இல்லாமை சிறுபான்மையினர் மீது அவர்கள்
கொண்டிருக்கும் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துகின்றது. சிவனார்மடு சித்திவினாயகர் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு நடும் முகமாக ஆயிரம் இதழ்கள்
கொண்ட தாமரை விதைகள் வழங்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது பாரிய விழ்ச்சியை சந்தித்திருக்கின்றது இதனை கட்டியெழுப்ப நாம் பாடுபடவேண்டும் எனவும் கருத்துரைத்ததார். மேலும் இது
எனது வெற்றியல்ல உங்களது வெற்றி உங்களில் ஒருவனாக நான் இருந்து மக்கள் பிணி துடைப்பேன் எனவும் எதிர்வரும் 20ந் திகதி
நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் எடுத்த பின்பு உங்களை சந்தித்து நமது கிராமத்தின் அபிவிருத்திக்கான குறைகளை அடையாளப்படுத்தி எனது
பணிகளை மேற்கொள்ளவுள்ளேன் எனவும் கருத்துரைத்ததார். நிகழ்வுகளை இ.வேனுராஐ; அவர்கள் நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல பொது மக்கள் இளைஞர்கள் என பலர் இணைந்து வரவேற்றனர்.