முதலில் புதிய தலைவர் அதன்பின்பே தேசிய பட்டியல்

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பாக தீர்மானித்த பிறகு தேசிய பட்டியலில் கிடைத்த ஆசனத்திற்கு ஏற்றவர் பெயரிடப்படுவதாக UNP பொது செயலாளர்  அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (10) சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.