சிறையில் அடைக்கப்பட்டுள்ள த பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியும்

0
125

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள த பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியும் என்று நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிகா தசநாயக்க . தெரிவித்துள்ளார்.

பிரேமலால் ஜெயசேகரவின் பெயர் தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி செய்யப்பட்டுள்ளது.

இரத்தினபுரி 142037 முன்னுரிமை வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

2015 ல் நடந்த ஒரு கொலைக்காக இரத்தினபுரி உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

இருந்தபோதும் அவர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.