பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதிவியேற்றதையொட்டி காத்தான்குடியில் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

ரீ.எல்.ஜவ்பர்கான்–
25வது பிரதமராக மஹிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை (09.08.2020) பதவியேற்றதை யொட்டி மட்டக்களப்பு காத்தான்குடியில் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில்ஈடுபட்டனர்.குளிர்பானங்கள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்தியில் இடம் பெற்றது. சிறீலங்கா பொது ஜன பெரமுன முஸ்லிம் பிரிவுக்கான காத்தான்குடி அமைப்பாளர் முகம்மட் அஸ்மி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் எம்.ரி.தையூப் ஆகியோரது ஏற்பாட்டில் இந்த நிழ்வு இடம் பெற்றது.
துஆப் பிராத்தனையைத் தொடர்ந்து குளிர்பானங்கள் வழங்கப்பட்டதுடன் பிரதான வீதியினால் சென்ற பாதசாரிகளுக்கும் குளிர்பானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சிறீலங்கா பொது ஜன பெரமுன முஸ்லிம் பிரிவுக்கான காத்தான்குடி முக்கியஸ்தர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.