பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதை அடுத்து பாண்டிருப்பில் தமிழ் மக்கள் பால்சோறு வழங்கி மகிழ்சிக் கொண்டாட்டம்.

0
127
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

இலங்கையின் 25வது பிரதமராக மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் தமது வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்முனை – பாண்டிருப்பு பிரதான வீதியில் தமிழ்மக்கள் பால்சோறு வழங்கி இன்று (09.08.2020) மகிழ்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதான வீதி வழியாக பயணம் செய்து கொண்டிருந்த மூவின மக்களுக்கும் குளிர்பானம் பால்சோறு வழங்கப்பட்டன.

பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை பிரதேச முக்கியஸ்தர் ஏ.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து தமிழ் முஸ்லிம் மக்கள் தமது வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்தனர்.