கற்பிணி பெண்ணின் உயிரை காவு கொள்ளப்பார்த்த களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையின் முன்வாயில் கதவு பலமுறை அறிவித்தும் நடவடிக்கை எடுக்காத பிரதேச சபை

0
159

கமல்

பட்டிருப்பு தொகுதியின் மத்திய கேந்திர நிலையமாக விளங்குவதும் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் வருமானத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையின் பிரதான முன்வாயில் கதவானது முற்று முழுதாக உடைந்த நிலையில் நெடுங்காலமாக காணப்படுகின்றது. இதனால் பொதுச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் நாளாந்தம் வரும் பொது மக்கள் சிலரும் பல அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக தெரியவருகின்றது.

முற்று முழுதாக இரும்பினால் செய்யப்பட்ட இக் கதவானது உடைந்து அருகில் உள்ள சுவரில் சாத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தை முடிந்த பின்னர் சந்தைக்குள்ளே காணப்படும் கடைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அதனைவிடுத்து  பலத்த காற்றடித்தால் சரிந்து விழுவதும் அதனை வர்த்தகர்கள் நிமிர்த்தி வைப்பதும்  கால் நடைகள் வந்து அதனை விழுத்துவதுமாக தொடர்ச்சியான அசௌகரியங்களுக்கு வர்த்கர்களும் பொதுமக்களும் முகங் கொடுத்து வருகின்றனர். இக் கதவினை திருத்துவது தொடர்பில் வட்டார உறுப்பினர் தவிசாளர் ஆகியோரிடம் பல தடவைகள் எழுத்து மூலம் அறிவித்தும் நடவடிக்கை எடுக்காதுள்ளனர்.