இரா.சாணக்கியன் அவர்களின் வெற்றியால் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி.

0
174

(எருவில் துசி) நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இரா.சாணக்கியன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்
முகமாக அவரின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டுக்கு படைபொடுப்பதை காணமுடிகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 79182 வாக்குகளை பெற்றது. இதில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பாக போட்டியிட்ட இரா.சாணக்கியன்
அவர்கள் கட்சி சார்பாக அதிக விருப்பு வாக்குகளான 33332 விருப்புவாக்குகளை பெற்று முதன்மை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ரெலோ சார்பாக போட்டியிட்ட கோவிந்தன் கருணாகரன் அவர்கள் 26382 வாக்குகளை பெற்று தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது வடகிழக்கில் பத்து ஆசனங்களை மட்டும் பெற்று பாரிய பின்னடைவை சந்தித்துள்ளமை ஆதரவாளர்கள் மத்தியில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இரா.சாணக்கியனின் வெற்றியில் மகிழ்வதனையும் காணமுடிகின்றது.

ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துரைத் இரா.சணக்கியன் அவர்கள் எனக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வென்று விட்டு மாறிவிடுவேன்
என பலர் எமது ஆதரவாளர்களிடம்
கூறியிருந்தார்கள் நான் வென்று 12 மணித்தியாலங்கள் ஆகிவிட்டது இன்றும் மாறவில்லை எப்போதும் மாற மாட்டேன் என கூறியவர்களிடம்
ஆதரவாளர்களை கூறும்படி வேண்டிக்கொண்டார்.

மேலும் எனது வெற்றிக்காக எவ்வாறு கூட்டங்கள் போடப்பட்டதே அந்த இடங்களில் நன்றி கூறும் வகையில் நாம் வெற்றி விழா கூட்டங்களை நடாத்த
வேண்டும். பொலிஸாரினால்
மூன்று தினங்களுக்கு எந்த கூட்டங்களையும் நடத்த கூடாது என அறிவிக்கப்பட்டடுள்ளது. எனவே நாடாளு மன்ற உறுப்பினர் சட்டத்தை மதிப்பவராக
இருக்க வேண்டும் ஆகவே நாம் அதற்கு ஏற்றவாறு எமது பணிகளை ஆற்றுவோம்.