ஐ.தே. கட்சியின் புதிய தலைவராக ருவான் விஜேவர்தன?

கட்சியின் புதிய தலைவராக ருவான் விஜேவர்தனவை நியமிக்க  ஐ.தே.கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்க பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி வட்டாரங்களின்படி, ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாடினார், இது அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவை திரு விக்ரமசிங்க அடுத்த வாரம் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.