புதிய அமைச்சரவை திங்கள்கிழமை

புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவியேற்பு நிகழ்வு கண்டியில் இடம்பெறவுள்ளது. அமைச்சரவையில் 26 உறுப்பினர்களே அங்கத்துவம் பெறுவார்கள் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் 20 ஆம் தேதி தொடங்கும் என்று ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.