9வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைககள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு அமைதியான முறையில் ஆரம்பமாகின.
இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும்இ கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும்இ பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்புக் கடமைகளுக்காக இம்முறை 4 ஆயிரத்தி 710 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்கெண்ணும் பணிகளுக்காக பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாக கல்குடா மற்றும் பட்டிருப்புத் தொகுதிக்கென மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும்இ மட்டக்களப்புத் தொகுதிக்கென மகாஜனக் கல்லூரியும் செயற்படவுள்ளன. இதில் 34 வாக்கெண்ணும் மண்டபங்களும் இந்துக்கல்லூரியிலும்இ 33 வாக்கெண்ணும் மண்டபங்கள் மகாஜனக்கல்லூரியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1417 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர் இதேவேளை
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மதியம் 12.00 மணி வரையான நேரத்தில்:
கல்குடா 42 %
மட்டக்களப்பு 40%
பட்டிருப்பு 38% வாக்குகள் பதிவாகியுள்ளது என
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.