கிழக்கில் 16 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 1033 வேட்பாளர்கள்போட்டி 1290 வாக்களிப்பு நிலையங்களில் 12 இலட்சத்து 12ஆயிரத்து 655பேர் வாக்களிக்கவுள்ளனர்.

0
160
பாண்டிருப்பு  
இம்முறை நடைபெறுகின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் 16 பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 49 அரசியல்கட்சிகள், 70 சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 1033 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அத்துடன் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் 12 இலட்சத்து 12 ஆயிரத்து 655 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.
இன்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் என்றுமில்லாதவகையில் அதிகவேட்பாளர்கள் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் 4 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக 13 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 868 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளார்கள். திருகோணமலை தேர்தல் தொகுதியில் 97065 பேரும், மூதூர் தேர்தல் தொகுதியில் 110891 பேரும், சேருவில தேர்தல் தொகதியில் 80912 பேரும் வாக்களிக்கதகுதி பெற்றுள்ளனர். இங்கு 307 வாக்களிப்பு நிலையங்களும் 44 வாக்கெண்னும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட  அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 16 அரசியல் கட்சிகள், 22 சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 409808 பேர் வாக்களிக்கத்தகதி பெற்றுள்ளனர். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 192808 பேரும், கல்குடா தேர்தல் தொகுதியில் 119928 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 97073 பேரும் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். இங்கு 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 6127 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களை தெரிவு செய்ய 20 அரசியல் கட்சிகள், 34 சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 5 இலட்சத்து 13 ஆயிரத்து 979 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளார்கள். அதற்கமைய அம்பாறை தேர்தல் தொகுதியில் 177144 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 168793 பேரும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 90405 பேரும் கல்முனை தேரத்ல தொகதியில் 77637   வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.இங்கு 525 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 6ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.