நுவரெலியா மாவட்டமும் பாராளுமன்ற தேர்தலும்.

0
132

எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து வாக்களிப்பதற்கு 5 லட்சத்து 77 ஆயிரத்து 717 பேர் தகுதிபெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணும் நிலையங்கள் 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலைவிட இம்முறை தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரதான வாக்கு என்னும் நிலையங்களாக நுவரெலியா காமினி தேசிய பாடசாலைஇ நுவரெலியா தொழில்நுட்ப கல்லூரிஇ நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரிஇ மாவட்ட செயலகம் ஆகிய நான்கு இடங்களிலேயே 85 வாக்கு என்னும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 4000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளனர். அது தவிர 4000 அதிகாரிகள் வாக்களிப்பு நிலையங்களிலும் 2000 பேர் தேர்தல் முடிவுகளை பெற்றுக் கொள்வதற்குமாக மொத்தமாக 10000 பேர் நுவரெலியா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் நுவரெலியா மாவட்ட செயலாளருமான எம்.பீ.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட தேர்தல் களம்

2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 34 ஆயிரத்து 150 ஆக இருந்தது. எனினும்இ 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் அத்தொகை 5 லட்சத்து 77 ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 43 ஆயிரத்து 576 பேர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர். அத்துடன்இ 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 416 பேர் வாக்களிக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அளிக்கப்பட்ட வாக்குகளிலும் 32 ஆயிரத்து 718 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. 2020 ஆகஸ்ட் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 8 ஆசனங்களை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளில் இருந்து 132 பேரும்இ 13 சுயேட்சைக்குழுக்களில் இருந்து 143 பேரும் களமிறங்கியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவான தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால்இ வாக்குகள் சிதறக்கூடிய அபாயம் இருக்கின்றது. இதனால் இருக்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. வாக்குரிமை என்பது எமது பிறப்புரிமையாகும். அதுவே பலம்பொருந்திய ஜனநாயக ஆயுதமும்கூட எனவேஇ கடமைக்காக வாக்களிக்காமல்இ மதிநுட்பத்துடன் வாக்களிப்பதே சிறந்தது.

 

தலவாக்கலை நிருபர்