மன்னாரில் பாதுகாப்பான முறையில் வாக்குப் பெட்டிகளும் ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டன.

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)

2020 ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்காக 45 கட்சிகளைச் சார்ந்து 405 வேட்பாளர்கள் இம்முறை களம் இறங்கியுள்ளனர்.

இவ் வன்னி தேர்தல் தொகுதியை பொறுத்தமட்டில் மன்னார் மாவட்டத்தில் 88842 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இன்று (05.08.2020) நடைபெறும் தேர்தல் வாக்களிப்பில் மன்னார் மாவட்டத்pல் 76 வாக்களிப்பு நிலையங்களில் இவ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ் நிலையங்களுக்கு நேற்று (04.08.2020) காலை 8 மணி தொடக்கம் காலை 10 மணி வரை வாக்குப் பெட்டிகளும் அதன் ஆவணங்களும் மிகவும் பாதுகாப்புகளுடன் குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதேவேளையில் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வாக்காளர்களுக்காக புத்தளப் பகுதியில் 5502 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு வாக்களிப்பதற்காக 12 நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவர்களுடன் 4096 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிப்தற்காகவும் பதிவாக இருந்தனர்.

புத்தளம் பகுதியில் வாக்களிப்பு முடிவுற்றதும் அவைகள்  வவுனியா வாக்குகள் எண்ணும் நிலையத்துக்கு நேரடியாகவே எடுத்துச் செல்லப்படும் என மன்னார் மவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான சி.ஏ.மோகன்றாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் இவ் தேர்தல் விடத்தியத்தில் சேவையில் 130 வாகனங்களும் 700 பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தேர்தல் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்வதிலும், உள்வாங்குவதிலும், வாக்குகள் எண்ணுவதிலும் மன்னார் மாவட்ட செயலகத்திலே ஈடுபட்டு வந்தபோதும் இம்முறை கோவிட் 19 காரணமாக இவ் அணைத்து செயல்பாடுகளும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையிலேயே இடம்பெறுகின்றது.

இவ் இடத்தில் 06.08.2020 அன்று காலை முதல் வாக்கு எண்ணும் பணிகளும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது இவ்வாறு இருக்க கடந்த பல நாட்களாக மன்னாரில் வீதிகளில் இருந்து வந்து இராணுவ சோதனை சாவடிகள் நேற்று முதல் (04.08.2020) அகற்றப்பட்டிருந்த நிலையும் காணப்பட்டன.