உகந்தமலையானின் ஆடிவேல் தீர்த்தோற்சவம் . (காரைதீவு நிருபர் சகா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம் நேற்று(4)செவ்வாய்க்கிழமை காலை 9மணியளவில்  ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

நேற்றுக்காலையில அங்குகூடிய ஆயிரம் பக்தர்கள் கடற்கரைக்குச்சென்று கிரியையகளில் ஈடுபட்டு பின்னர் சுபநேரத்தில் தீர்த்தமாடினர்.

திருவோணம் காலை 9.15மணியளவில் நிறைவுறுவதால் அதற்கு முன்னதாக தீர்த்தம் ஆலயவண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) தலைமையில் ஆலயத்தின் கிழக்கேயுள்ள வங்காளவிரிகுடா சமுத்திரத்தில் வழமைபோன்று  நடைபெற்றது.

தீர்த்தோற்சவத்தில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினமே சுமார் ஆயிரம் பக்தர்கள் ஆலயத்தை சென்றடைந்தனர்..

கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆடிவேல்விழா மஹோற்சவம் நேற்று (4) செவ்வாய்க்கிழமை ஆலயதீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது..

ஆலயதிருவிழாசிறப்புப் பூஜைகளை ஆலயபிரதமகுருக்கள் சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் உதவியாக சிவஸ்ரீ க.கு.சீ.கோவர்த்தன சர்மா ஆகியோர் நடாத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.