பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் மட்டக்களப்பில நேர்த்தியாக விநியோகிக்கப்பட்டன. ஓடியோ, வீடியோ

2020 பொதுத்தேர்தலை மட்டக்களப்பு மாவட்டத்தில் நேர்த்தியாக நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலில் வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாக்குப்பெட்டி விநியோகம் இடம்பெறும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் கடமைக்கு சமூகமளிக்கும் உத்தியோகத்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டதுடன்  தேர்தல் கடமைக்கு பயன்னடுத்த தருவிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டு வளாகத்துக்குள் எடுககப்பட்டதுடன் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பொதத்தேர்தலில் வாக்கென்னும் நிலையங்களாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும்இ மட்டக்களப்பு மஹஜன கல்லூரியும் செயற்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது