ரீ.எல்.ஜவ்பர்கான்–
பொதுத் தேர்தல் 2020 நடைபெறுவதற்கு இன்னும் 02 தினங்களே உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகத்திற்கு இதுவரை 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவற்றில் சட்டவிரோத பதாதைகள், சுவரொட்டிகள் தொடர்பாக 98 முறைப்பாடுகளும், அரச ஊழிளர்கள் அரசியலில் ஈடுபட்டமை தொடர்பாக 30 முறைப்பாடுகளும், அன்பளிப்பு வழங்கள் தொர்பாக 42 முறைப்பாடுகளும், கூட்டம் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பாக 52 முறைப்பாடுகளும், அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பாக 10 முறைப்பாடுகளும், நியமனங்கள் மற்றும் இடமாற்றம் தொடர்பாக 3 முறைப்பாடுகளும், சொல் அச்சுறுத்தல் செய்தமை தொடர்பாக 3, இலத்திரனியல் ஊடக துஸ்பிரயோகம் தொடர்பாக 2 முறைப்பாடுகளும், சமுக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் தொடர்பாக 4 முறைப்பாடுகளும், வலிந்து தாக்குதல் கும்பலாகத் தாக்கதல் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொய்ப்பிரச்சாரம் செய்தமை தொடர்பில் 2 முறைப்பாடுகளும், அஞ்சல் வாக்கு தொடர்பாக 1 முறைப்பாடும், சட்டவிரோத நிகழ்வு ஏற்பாடு செய்தமை தொடர்பில் 2 முறைப்பாடுகளும், வாக்காளர் உபசரிப்பு தொடர்பில் 1 முறைப்பாடும், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல் தொடர்பில் 3 முறைப்பாடுகளும், சொத்துக்களுக்கு சேதமிழைத்தல் தொடர்பில் 2 முறைப்பாடுகளும், மதத்தலைவர்கள் ஊடாக பிரசாரம் செய்தல் தொடர்பில் 5 முறைப்பாடுகளும், தீ வப்பு எரியூட்டல் போன்றவை தொடர்பாக தொடர்பில் 1 முறைப்பாடும், பொதுவானவற்றில் 2 முறைப்பாடுகளுமாக 269 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இம்முறைப்பாடுகளில் தேர்தல் சட்டவிதி மீறல் தொடர்பாக 257 முறைப்பாடுகளும், தேர்தல் வன்செயல்கள் தொடர்பில் 12 முறைப்பாடுகளும் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றில் 172 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய 97 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா மாவட்ட அரச ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
02.08.2020