கல்முனை நற்பிட்டிமுனையில் தேர்தல்சட்டவிதிமறையை மீறிய அரச கட்சி இணைப்பாளர் பொலிஸாரினால் கைது

0
128
பாண்டிருப்பு

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்தில் அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளர் இன்று மாலை (02) கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சியின் நற்பிட்டிமுனை பிரதேச இணைப்பாளராக செற்படும் ஏ.எல்.ரபீக் என்பவர் தனது வீட்டில் கட்சி அலுவலகத்தை அமைத்து கட்சி செயற்பாடுகளை முன்னெடுத்துவந்துள்ளார். இந்நிலையில் அவரது அலுவலகத்திற்கு முன்பு ஜனாதிபதிகோட்டாபயராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்தராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரது புகைப்படங்கள் இடங்கிய பதாதைகளையும்,வேட்பாளர் இலக்கத்தையும் காட்சிபடுத்தி வைத்துள்ளார்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துடன் கட்சி அலுவலகம் முன்புள்ள பதாதைகளை அகற்றுமாறு பல தடவைகள் பிரதேச கட்சி இணைப்பாளருக்கு அறிவுறுத்தல்களும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்று வரை அவை அகற்றப்படாதிருந்துள்ளது.
அதனையடுத்து இன்று அவ்விடத்திற்கு பொலிஸாருடன் சென்ற அம்பாறை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் குறித்த பிரதேச இணைப்பாளரை அணுகி தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அப்பால்  காட்சிப்படுத்தப்பட்டுள்ள கட்சி பதாதையினை அகற்றுமாறு கோரியபோது தேர்தல் அதிகாரிகளுடனும், பொலிஸாருடனும் கட்சி இணைப்பாளர் கடும்வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து இவ்விடயம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் கல்முனை பொலிஸாரினால் சம்பந்தப்பட்ட கட்சியின் இணைப்பாளர்; உடனடியாக கைது செய்யப்ட்டார்.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இணைப்பாளர் பொலிஸ்வாகனத்திற்குள் ஏறமறுத்தபோது அங்கு மேலும் பதற்றம் நிலவியது. தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி குறித்தநபர் பதாதைகளை காட்சிப்படுத்தி வைத்திருந்ததாகவும், அதனை அகற்றுமாறு கோரியபோது தங்களுடன் கைகலப்பிலும், வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டதையடுத்து உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸாருடன் உதவியுடன் அவரை கைது செய்துள்ளதாக  அங்கு வருகைதந்த அம்பாறை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தெரவித்தனர்.