தமிழ்கூறும் அனைத்து இஸ்லாமிய நல்லுள்ளங்களுக்கும்புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் 

(எஸ்.அஷ்ரப்கான்)
புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ்கூறும் அனைத்து இஸ்லாமிய நல்லுள்ளங்களுக்கும் தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட்
புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய, சிறுபான்மைகளை, குறிப்பாக முஸ்லிம்களை அரவணைத்துச் செல்லக்கூடிய ஆட்சி நம்நாட்டில் மலர எல்லாம் வல்ல இறைவனைப் இப்புனித தினத்தில் பிரார்த்திப்போம்.
நாம் ஓர் தேர்தலின் ஓரத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம். தேர்தலில் வாக்களிப்பது என்பது “சாட்சி பகர்தல்” என்கின்றனர் உலமாக்கள்.
முஸ்லிம் சமூகம் ஓர் இக்கட்டான காலகட்டத்தில் இத்தேர்தலை முகம்கொடுக்கின்றது. எனவே, இக்காலகட்டத்தில் உங்களை பாராளுமன்றத்தில் பிரதிநித்துவப்படுத்த பொருத்தமானவர் யார்? என்பதற்கு நாம் தேர்தலில் சாட்சி பகரப்போகிறோம்.
அந்தப் பொருத்தமானவர்களுள் ஒருவராக வை எல் எஸ் ஹமீட்டை நீங்கள் கண்டால், உங்கள் மனச்சாட்சி சொன்னால் அதற்காக தேர்தல்மூலம் சாட்சி பகரவேண்டியது நம் பொறுப்பாகும்.
எனவே, அவ்வாறு உங்கள் மனச்சாட்சி சொன்னால் அதற்கான சாட்சியத்தை அல்லாஹ்வை முன்னிறுத்தி எனது சின்னமான மயிலுக்கும் எனது இலக்கமான 8 இற்கும் வாக்களிப்பதன்மூலம் பகருமாறு உங்களை சகோதர வாஞ்சையுடன் வேண்டுகின்றேன்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் உங்களுக்காக நேர்மையாக உழைக்கும் உணர்வுடன்
உங்கள் அன்பு சகோதரன்
வை எல் எஸ் ஹமீட் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.