மகிழடித்தீவு பாடசாலைக்கு புதிய அதிபர்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக த.தியாகராசா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் கடமை ஆற்றிய அதிபர் ஓய்வு பெற்று சென்றதையடுத்து, இப்பாடலைக்கு அதிபர் வெற்றிடம் நிலவியது. இதற்கான அதிபரை நியமிக்கும் வகையில் மாகாண கல்வி திணைக்களத்தினால் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதற்கமைய அதிபர் சேவை வகுப்பு 1ஐ சேர்ந்த த. தியாகராசா நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

விவசாய டிப்ளோமாவை நிறைவு செய்து ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்பட்ட இவர், பின்னர் அதிபர் சேவையில் இணைந்து கொண்டார்.

பயிற்றப்பட்ட விவசாய ஆசிரியரான இவர், விவசாய பாடத்தில் B.Scபட்டத்தினையும், பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் நிறைவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.