சம கால மனித உரிமை மீறல் விடயங்களுக்கான விழிப்புணர்வு

பாறுக் ஷிஹான்

தகவலறியும் சட்ட நுணுக்கம் மற்றும் சம கால மனித உரிமை மீறல் விடயங்களுக்கான விழிப்புணர்வு தொடர்பான கருத்தாடல் அரங்கமொன்று அம்பாறை மாவட்டம்  மருதமுனை பாண்டிருப்பு பெண்கள் வலுவூட்டல் மத்திய நிலையத்தில் இன்று(26)  இடம் பெற்றது

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் நிலையத்தின் இணைப்பாளர் யூ.எல்.ஹபீலா  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டார்

இந்நிகழ்வில்  கல்முனைப் பிராந்தியத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண் வலுவூட்டல் அமைப்பின் பிரதி நிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள்  பயனாளிகளாகக் கலந்து கொண்டனர்