பிள்ளையான் மீதான விசாரணை ஒத்திவைப்பு 19.10.2020 வரை விளக்கமறியல் வீடியோ.

ரீ.எல்.ஜவ்பர்கான்–

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திகாந்தனை 19.10.2020  திகதிவரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி என் .சிறீநிதி  உத்தரவிட்டார்.

கடந்த 2005.12.25ம் திகதி அன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக பிள்ளையான் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது 19.10.2020 விளக்க மறியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.