சீறியெழுந்த சாணக்கியன் சிந்திக்கவைத்த பதில்கள்.

0
207

 

மட்டக்களப்பு treatooo city  Hotel  நடைபெற்ற (25)ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பின் போது பலவிடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக ஊடயவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்த சாணக்கியன் அவர்கள் எனது வெற்றியினையும் என்மீது மக்கள் கொண்ட அதிக விருப்பு காரணமாகவும் என் பின்னால் நிற்கும் இளைஞர் படையணியின் கனதியை சகித்துக்கொள்ள முடியாத சிலர் என் மீது அபண்டமான குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள் வாயிலாக முன்வைப்பதை காணமுடிகின்றது. அவர்கள் என் மீது வைக்கும் ஒவ்வெரு
குற்றச்சாட்டுக்களும் என் முன்னேற்றத்திற்கான படிக்கல்களாக அமைகின்றது. அவர்கள் என்மீது ஒரு பொய்யான விமர்சனத்தினை வைக்கும்போது நான் அவர்கள் தொடர்பாக பத்து உண்மைகளை வெளிப்படுத்துவேன். போலி தமிழ் தேசியம் பேசிவிட்டு ஒட்டுக்குழுக்களுக்கு பின்னால் திரிவதை நான் நன்கு அறிவேன். யார் இதை செய்கின்றார்கள் என்பது எமக்கு புரியும் அவர்களின்
எழுத்து வான்மையுடாக நான் விளங்கிவைத்துள்ளேன்.

எனது தாய் தொடர்பாகவும் எனது பிறப்பு பற்றியும் பலர் விமர்ச்சிக்கின்றனர் இதனை தெளிபுபடுத்தும் முகமாக எனது தாயின் பிறப்பு பதிவினை வெளியிடுகின்றேன் இதில் பார்த்தால் புரியும் சிலோன் தமிழ் என பதிவிடப்பட்டுள்ளது.
தமிழனாக பிறந்தவன் யாராகினும் இந்த பிறப்பு பதிவிற்கு
பின்பு எனது தாயைப்பற்றி விமர்சிப்பாளர்களாக இருந்தால் அவர்களின் பிறப்பை பற்றி சிந்திக்க வேண்டியிருக்கின்றது. எனவும் கருத்தரைத்தார்.

மேலும் தனது வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறான விமர்சனங்களுக்கு நான் அஞ்சி ஒழியப்போவதில்லை
முறைமையான விமர்சனங்களை நான் எதிர்பார்க்கின்றேன் என தனது பதிவை முன்வைத்தார்.