மன்னார் மாவட்டத்தில் தேர்தல் சட்டங்களை மீறி நடந்து கொண்ட 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0
149

வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் சட்டங்களை மீறி நடந்து கொண்ட 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து எமது கண்காணிப்பு நிலையங்களை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மன்னார் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுவிடயமாக மேலும் தெரிவிக்கையில்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசாரங்கள் கொரோனா தொடர்பான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றதா என்பதை கண்காணிக்கும் நோக்குடன் ஒரு தெரிவத்தாட்சி அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் கண்காணிப்பின் கீழ் ஒவ்வொரு பிரசார நிலையங்களிலும் கொவிட் 19 தொற்றுநோய் பரவாதிருக்குமுகமாக எல்லாவிதமான சுகாதார வழிகாட்டல்களும் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதைக் கண்காணித்து நாளாந்தம் அறிக்கை சமர்பிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் இதுவிடயமாக தேர்தல் பிரசார நடவக்கையில் ஈடுபடுவோருக்கு அடிக்கடி சுகாதாரத்தை பேணுமுகமாக வலியுறுத்தப்பட்டும் வருகின்றது.

மேலும் மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சுவரொட்டி ஒட்டுதல் தொடர்பான முறைபாடுகளே அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக உடனடியாக பொலிசாரின் உதவியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது வரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து எமது கண்காணிப்பு நிலையங்களை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்த வாரத்திலிருந்து மேலும் மூன்று கண்காணிப்பு நிலையங்களை விஸ்தரிக்க இருக்கின்றோம். அடுத்த வாரம் முதல் தேர்தல் வண்செயல்கள் மேலும் தொடர்ந்து நடைபெறாதிருக்கு முகமாக தேர்தல் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதாவது தேர்தல் சட்டத்திட்டங்களை பின்பற்றி ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். மன்னார் பொலிஸ் நிலையப் பகுதிகளிலேயே அதிகமான முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருப்பதாகவும் மன்னார் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் இவ்வாறு தெரிவித்தார்.